
கிராமத்தில் பிரம்மாண்ட வீடு கட்டும் போட்டோவை வெளியிட்டுள்ளார் மணிமேகலை.
தமிழ் சின்னத்திரையில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆகி அதன் பிறகு விஜய் டிவியில் பணியாற்றி வருபவர் மணிமேகலை.
உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித்து கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.
தவிர்க்க முடியாத சில காரணங்களால் இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில் மணிமேகலை நாளுக்கு நாள் உடல் எடை கூடிக் கொண்டே வருவதால் அவர் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவ பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தனர்.
இந்த நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொந்த ஊரில் பிரம்மாண்டமாக பண்ணை வீடு கட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உசேன், மணிமேகலைக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.