CWC Kani in BB 5

குக் வித் கோமாளி பிரபலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CWC Kani in BB 5 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கான தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்றே கூறலாம்.

இந்த நிகழ்ச்சியை இரண்டாவது சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் டைட்டில் வின்னர் ஆக கனி இடம் பெற்றிருந்தார்.

இப்படியான நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளராக கனி கலந்து கொள்ளப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.