CWC Ashwin in Adithya Varma Movie

துருவ் விக்ரம் முதல் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் நடித்துள்ளது தெரியவந்துள்ளது.

CWC Ashwin in Adithya Varma Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். இவருடைய மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான இத்திரைப்படத்தை இயக்குனர் கிரிசாயா இயக்கினார். ‌‌‌

முதல் படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தி புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா என்பதை நிரூபித்தார் துருவ் விக்ரம். இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் அஷ்வின் நடித்து இருப்பது தெரியவந்துள்ளது. இவர் இந்த படத்தில் நாயகனின் சகோதரனாக நடித்துள்ளார்.

இத்திரைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆதித்யா வர்மா திரைப்படத்தில் அஸ்வின் நடித்துள்ளாரா? இத நோட் பண்ண மறந்து விட்டோமே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.