குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியை ரக்ஷன் உடன் இணைந்து தொகுத்து வழங்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

CWC 3 Anchor Update : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. சமையல் நிகழ்ச்சி மிகவும் காமெடியாக கொண்டு சென்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி என்றால் அது இதுதான்.

தேங்காய் சுடும் பண்டிகையின் ஐதீகம்
 

முதல் சீசனை மற்றும் அறந்தாங்கி நிஷா ஆகியோர் இணைந்து தொகுத்து வழங்கினர். இரண்டாவது சீசனை ரக்ஷன் மட்டும் தொகுத்து வழங்கினார். இதனைத் தொடர்ந்து மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

விரைவில் குக் வித் கோமாளி 3.. ரக்ஷன் உடன் இணைந்து நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா??

அதுமட்டுமல்லாமல் 3-வது சீசனை ரக்ஷனுடன் இணைந்து மணிமேகலை தொகுத்து வழங்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு சீசன்களாக கோமாளியாக பங்கேற்ற மணிமேகலை மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க உள்ளார்.

இதனால் நிகழ்ச்சி இன்னும் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிவாசல் படத்திற்காக சூர்யா எடுத்த அதிரடி முடிவு