Cutout for Samantha in Andhra : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
நாளை வெளியாகும் இப்படத்திற்காக சமந்தாவுக்கு ஆந்திராவில் ஹீரோவுக்கு இணையாக கட் அவுட் வைத்து அசத்தியுள்ளார்கள்.

Cutout for Samantha in Andhra : பொதுவா ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆச்சுனா அவங்களோட கேரியர் அதோட முடிஞ்சிடும்னு சொல்வாங்க.

ஆனா சமந்தா விஷயத்தில இது தலைகீழா நடக்குதுன்னுதான் சொல்லனும். இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு அப்புறம்தான் முன்பிருந்தத விடபிஸியான நடிகையா சமந்தா வலம் வர்றாங்க.

இவங்கதான் நிஜ சூப்பர் ஸ்டார்ஸ் – ரஜினியை சீண்டிய ஜோதிகா; கொதித்தெழுந்த ரசிகர்கள்!

அந்தவகையில் கடந்த ஆண்டு மட்டும் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தளம், மகாநடி ஆகிய இரண்டு தெலுங்கு படங்களும் மெகா வெற்றியை ருசித்தது.

அதேபோல் இந்த ஆண்டு இவருடைய நடிப்பில் தெலுங்கில் வெளியான மஜிலி படமும் நல்ல கமர்ஷியல் வெற்றியை பெற்றது.

இதனால் சமந்தா வழக்கத்தை விட செம உற்சாகமாக இருக்கிறார். அதே உற்சாகத்தோடு தற்போது ஓ பேபி படத்தில் நடித்துள்ளார்.

இதில் உருவத்தில் இளம் பெண்ணாகவும் மனதளவில் பாட்டியாகவும் என வித்தியாசமாக நடித்துள்ளார். நாளை வெளியாகும் இப்படத்திற்காக சமந்தாவுக்கு ஆந்திராவில் ஹீரோவுக்கு இணையாக கட் அவுட் வைத்து அசத்தியுள்ளார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here