Cute Video of Sameera Reddy
Cute Video of Sameera Reddy

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலில் சமீரா ரெட்டியின் சுட்டிக் குழந்தை கூலிங் கிளாஸ் அணியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Cute Video of Sameera Reddy : தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம், வெடி, அஜித்துடன் அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி.

இவர் திருமணத்திற்குப் பின்னர் தற்போது தன்னுடைய குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது.

நீருக்கு அடியில் திருமண நாளை கொண்டாடிய சினேகா, பிரசன்னா – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

அடிக்கடி அந்த குழந்தையுடன் நேரத்தை செலவிடும் வீடியோவை வெளியிட்டு வருகிறார் சமீரா ரெட்டி.

இந்த வகையில் தற்போது தன்னுடைய குழந்தை சூப்பர் ஸ்டாரை போலவே கூலிங் கிளாஸ் அணியும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.