கஸ்டடி திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவரது நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கஸ்டடி திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நேரடியாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடிக்க சரத்குமார், பிரேம்ஜி, சம்பத்ராஜ், பிரியாமணி, பிரேமி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்திருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் நிலையில் இப்படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

YouTube video