Curry Leaves Thokku Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Curry Leaves Thokku Recipe :

தேவையான பொருட்கள் :

கறிவேப்பிலை – ஒரு கட்டு, சின்ன வெங்காயம் – 15,
பூண்டு – 10 பல்,
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு – தேவைக்கேற்ப,
கடுகு – சிறிதளவு,
நல்லெண்ணெய் – தேவையான அளவு,
காய்ந்தமிளகாய் – 4,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
பெருங்காயம் – சிறிதளவு,
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகு – /2 டீஸ்பூன்.

செய்முறை :

வெங்காயம், பூண்டு தோல் உரித்து தண்ணீரில் அலசி கொள்ளவும். கறிவேப்பிலையையும் உருவி நன்கு அலசி வைக்கவும்.

1) ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு வெடித்தவுடன் காய்ந்தமிளகாய்
வெந்தயம், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகும் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

ஜீவாவுக்கு கை கொடுக்குமா ஜிம்பங்கி – கொரில்லா விமர்சனம்.!

2) வறுத்தவை ஆறியதும் கறிவேப்பிலையை சேர்த்து, தேவைக்கு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

3) வாணலியில் நல்லெண்ணெயை சூடாக்கி பின் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பின் புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்க்கவும்.

4) அரைத்த விழுது சேர்த்து கொதிக்க வைக்கவும். எண்ணெய் பிரிந்து நன்கு சுண்டி வர பதமாக இறக்கி ஆறவிடவும்.

5) சுவையான கறிவேப்பிலை தொக்கு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here