Curd Pakoda Recipe : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Curd Pakoda Recipe :

தேவையான பொருட்கள் :

குழம்பு தயாரிக்க :
தயிர் – 1 கப்,
கடலை மாவு – 3டீஸ்பூன்,
வெங்காயம் – 1,
துருவிய இஞ்சி – சிறிது,
கடுகு – 1 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
வெந்தயம் – 1 /4 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிது,
மிளகாய் தூள் – 1 1 /2 டீஸ்பூன், பெருங்காய தூள் – 1 சிட்டிகை,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு,

பக்கோடா தயாரிக்க:

கடலை மாவு – 1 கப்,
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் – 4, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
சோடா உப்பு -1 சிட்டிகை,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

1) பக்கோடா தயாரிக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து, தேவையான அளவு நீர் சேர்த்து,பக்கோடாவாக எண்ணையில் பொரித்து எடுத்து கொள்ளவும்.

2) குழம்பு தயாரிக்க கொடுத்துள்ள கடலை மாவுடன் நீர் சேர்த்து கட்டி இல்லாமல் அடித்து மஞ்சள் தூள் சேர்த்து, கலந்து வைத்து கொள்ளவும்.

பாம்பே சட்னி செய்வது எவ்வாறு?

3) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காய தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம் , இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து தாளிக்கவும்.

4) அதனுடன் கடலை மாவு கலந்த கலவையை ஊற்றி ,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

5) குழம்பு லேசாக கெட்டியானவுடன், பக்கோடாவை அதில் போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கி
தயிர் சேர்த்து கலந்து விடவும்

6) கொத்துமல்லி தழை சேர்த்து அரை மணி நேரம் கழித்து பரிமாறவும் .

7) சுவையான தயிர் பக்கோடா குழம்பு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here