Cultivation of Paddy in Delta Districts
Cultivation of Paddy in Delta Districts

30 ஆண்டுகளில் இல்லாத அளவாக டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

Cultivation of Paddy in Delta Districts : தமிழகத்தைப் பொருத்த வரை டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி என்பது முக்கியமா ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாய நிலங்களுக்கு நீர் திறந்து விடுதல் போன்றவைகளை தமிழகத்தின் முக்கியமான செயல்பாடுகளாக இருந்து வருகின்றன.

இந்த வருடம் சரியான நேரத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு மேற்கொண்டதன் காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவாக இந்த வருடம் 3.87 லட்சம் ஏக்கர் நிலத்தில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 2.803 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதைவிட 1.67 ‌ லட்சம் ஏக்கரில் கூடுதலாக குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக அரசு தக்க நேரத்தில் எடுத்த நடவடிக்கையே காரணம் என விவசாயிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.