CSK vs MI :
CSK vs MI :

CSK vs MI : ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை-மும்பை அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளது.

ஏற்கனவே அடைந்த தோல்விக்கு சென்னை அணி பதிலடி கொடுக்ககுமா இல்லை மும்பை அணி வெற்றி பெறுமா என இன்று மாலை பதில் கிடைகும்.

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இன்னும் 13 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே இதுவரை ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்திருக்கிறது.

இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் 44-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை எதிர்கொள்கிறது.

சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு முன்னேற இரண்டு வாய்ப்பு கிடைக்கும் என்பதால் ‘நம்பர் ஒன்’ இடத்தை வலுப்படுத்துவதில் சென்னை அணி தீவிரம் காட்டி வருகிறது.

தொடக்க வரிசை வீரர்களின் பேட்டிங் தான் சென்னை அணிக்கு கவலைக்குரியதாக இருந்தது.

அந்த குறையை போக்கிய ஷேன் வாட்சன் முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 96 ரன்கள் விளாசி அசத்தினார்.

கேப்டன் டோனி, ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகியோரும் பார்மில் இருப்பது சென்னை அணிக்கு உற்சாகம் தருகிறது.

பந்து வீச்சில் தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ஹர்பஜன்சிங் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

அது மட்டுமின்றி உள்ளூரில் ஆடுவது சென்னை அணிக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கக்கூடிய விஷயமாகும்.

இந்த சீசனில் இங்கு நடந்த 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ள சென்னை அணி, உள்ளூரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையோடு பயணிக்கிறது.

ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அவர்களது இடத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு சென்னை அணி வஞ்சம் தீர்த்துக் கொள்ளுமா? என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது.

அடுத்த சுற்றுக்கு முன்னேற எஞ்சிய 4 ஆட்டங்களில் 2-ல் அந்த அணி வெற்றி பெற்றாக வேண்டும்.

5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் காணும் மும்பை அணியும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

அணி விவரம் :

சென்னை: வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ், வெய்ன் பிராவோ, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங், தீபக் சாஹர், இம்ரான் தாஹிர்.

மும்பை: குயின்டான் டி காக், ரோகித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், பென் கட்டிங், குருணல் பாண்ட்யா, ராஹல் சாஹர், பும்ரா, மலிங்கா, மயங்க் மார்கண்டே.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.