Crow Jothidam

Crow Jothidam : பட்சி சாஸ்திரம் என்பது ஐந்து பறவைகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் காகமும் ஒரு பட்சியாகும்.

காகம் சனி தேவனின் வாகனமாகவும் முன்னோர்கள் ஆகவும் நமக்கு காட்சி அளிக்கிறது பற்றி சாஸ்திரத்தில் உள்ள காகம் மனித வாழ்வில் நடைபெறும் சில மாற்றங்களை முன்கூட்டியே தெரிவிக்கின்றது.

● ஒருவரின் பயணத்தின்போது காகம் வலமிருந்து இடம் போவது பொருள் லாபத்தையும் ,இடமிருந்து வலம் போவது பொருள் நஷ்டத்தையும் உண்டாவதை தடுக்கிறது.

●வெளியூர்பிரயாணம் மேற்கொள்ளும் ஒருவரை நோக்கி கரைந்துகொண்டே பறந்து வந்தால் அதை தவிர்த்து விடுவது உத்தமம்.

● ஒருவர் பிரயாணம் செய்யும்போது ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவிடும் காட்சியை பார்த்தால் அவர்கள் மேற்கொண்ட பயணத்தில் எண்ணிய முடிவு உண்டாகும்.

● ஒருவருடைய பிரயானத்தின் போது அவரது வாகனம், குடை, காலணி அல்லது அவருடைய உடல் மற்றும் நிழல் போன்றவற்றில் காகம் தன் இறகுகளால் தீண்டினால் எதிர்பாராத மரணம் அவருக்கு உண்டாவதை குறிக்கிறது.

● ஒருவரின் வாகனம், குடை, காலணி போன்றவற்றின் மீது காகம் கழிவுகளை விட்டால் அவர்களின் பிரயாணத்தின்போது உணவுக்கு பஞ்சம் ஏற்படாது.

● காகம் தன் குஞ்சுகளுடன் கூட்டில் வசிப்பது சுபிட்சத்தை குறிக்கிறது.

● பலத்தகுரலில் பல காகங்கள்
ஒன்றாக இணைந்து ஒரு ஊரின் மேலாக பறப்பது, அவருக்கு ஏற்பட உள்ள பெரும் துன்பத்தை குறிக்கிறது.

● காரணமின்றி காகம் ஒருவரின் மேலே படுப்பது அவருக்கு உடல்நலக் குறைபாடு தோன்றுவதை குறிக்கிறது.

● மலர் மற்றும் கனிகளைக் காகம்
கொண்டு வந்து வீட்டில் போட்டால் ஆண் குழந்தை பிறக்கும். புல் மற்றும் குச்சிகளை கொண்டு வந்து வீட்டில் போட்டால் பெண் குழந்தை பிறக்கும்.

காகம் கரையும் திசையும் அதன் பலன்களும் :

கிழக்கு- அரசு அனுகூல காரியங்களில் ஜெயம் கிட்டும் காரிய சித்தி உண்டாகும்.

மேற்கு – தானிய விருத்தி மற்றும் கடலில் விளையும் பொருட்களான பவளம் முத்து போன்றவற்றின் சேர்க்கை உண்டாகும் .

வடக்கு – ஆடை செய்யும் காரியங்கள் மற்றும் நல்ல உணவு கிடைக்கும்.

தெற்கு – தானியங்களில் எதிர்பார்த்த லாபமும் சங்கீதத் துறையில் உள்ளோரின் நட்பு கிட்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here