Cricket Match Gambling : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, Cricket Match

Cricket Match Gambling :

சென்னை: சென்னையில் ஆன்லைன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.53 லட்சம் பணம், லேப்டாப், 2 பணம் கணக்கிடும் இயந்திரம் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூளைமேட்டில் தனியார் விடுதியில் தங்கியிருந்து ஆன்லைன் மூலம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் உதவி ஆணையாளர் மகேஸ்வரி தலைமையில் 4 காவலர்கள் கொண்ட தனிப்படையினர் நேற்று இரவு அந்த விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு 3 பேர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.  இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவர் தப்பி ஓட்டம் பிடித்தார்.

பெற்ற மகளையே கடத்திய வனிதா, எந்நேரமும் கைதாக வாய்ப்பு – அதிர்ச்சி தகவல்.!

கைது செய்யப்பட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் ராகுல் ஜெயின் மற்றும் தினேஷ்குமார் எனவும், இருவரும் சென்னை சைதாபேட்டையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 2 நபர்களிடம் இருந்து 2 பணம் கணக்கிடும் இயந்திரம், 3 செல்போன், 3 லேப்டாப், மற்றும் ரூ.53 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக வெளிநாட்டு நபர்களுடன் தொடர்பு உள்ளதா? என்பது போன்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here