CPC Warning to Kushboo
CPC Warning to Kushboo

CPC Warning to Kushboo : சில வருடங்களுக்கு முன், ‘தமிழ் பெண்களுக்கு கற்பு என்பதே கிடையாது…’ என்பதை போன்ற அபத்தமான கருத்தை சொல்லி தமிழகத்தின் பல மாவட்டங்களில் எண்ணற்ற வழக்குகளுக்கு மேல் சிக்கியவர் நடிகை திருமதி.குஷ்பு.

இந்த வழக்குகளுக்கு பயந்து, அப்போதைய ஆளுங்கட்சியான திமுகவில் ஐக்கியமானதும் , அவை ஒரு வழியாக முடித்து வைக்கப்பட்டதும் திமுகவிலும் ரொம்ப நாள் நீடிக்காமல் காங்கிரஸ் கட்சிக்கு தாவி., இன்றளவும் நம்மூர் அரசியல் தலைவர்களில் தொடங்கி, பிரதமர் வரை சகலரைப் பற்றியும் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பின் வருத்தம் தெரிவித்து வருவதும் இவரது வாடிக்கை !

தான் ஒரு பிரபலமான நடிகை., தான் பேசும் பேச்சுக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிந்தே, எப்போதும் லைம் லைட்டில் இருக்கவேண்டும் எனும் வெறியில் பப்ளிசிட்டிக்காக ரொம்பவே ஆணவத்தோடு பல கருத்துக்களை சொல்லி சர்ச்சையில் சிக்குவது திருமதி.குஷ்புவின் வழக்கம்.

மீண்டும் தொடங்க போகும் ஆண்களின் தலைவலி, இனி சாப்பாடு கிடைக்காது – புலம்பும் கணவன்மார்கள், காரணம் என்ன தெரியுமா?

அப்படி, அடிக்கடி வம்பில் சிக்கி பத்திரிகையாளர்களிடமும், மீடியாக்களிலும் படாதபாடு படுவது நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது கொரானா தடை காலம். திரையுலகம் முழுதும் முடங்கியிருந்தது.

இச்சூழலில் பல முறை நடையாக நடந்து, கிடையாக கிடந்து அரசாங்கத்திடம் கெஞ்சிக்கூத்தாடி டிவி சீரியல் ஷூட்டிங் நடத்த தமிழக அரசிடம் அனுமதி வாங்கினார்கள் திருமதி.குஷ்பு செயலாளராக இருக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தினர். அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அந்த அனுமதி தமிழக அரசால் தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டிவி சீரியல் ஷூட்டிங் நடத்துபவர்களுக்கு திருமதி.குஷ்பு ஒரு ஆடியோ (வாய்ஸ்) மெஸேஜ் அனுப்பி உள்ளார். அதில் அவசியமே இன்றி பத்திரிகையாளர்களை ஏகவசனத்தில் ஒருமையில் விளித்தும், விமர்சித்தும் பேசியுள்ளார்.

இந்த ஆடியோ நேற்று பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்து சின்னத்திரை ஷுட்டிங் பற்றிய பெப்சி அமைப்புடனான சின்னத்திரை மீட்டிங்குகளிலும் எதிரில் இருக்கும் யாருடைய நலன் பற்றியும் அக்கறை கொள்ளாமல், முக கவசம் அணியாமல்… (அங்கேயே முக கவசம் அணியாத குஷ்பு, ஷூட்டிங் ஸ்பாட்டில் எங்கே அணியப்போறாங்க? எங்கே தனி நபர் இடைவெளியை கடைபிடிக்கப்போறாங்க.?!) ஏகத்துக்கும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பதை விளக்கும் வீடியோவும் வெளிவந்தது.

அதே நேரம், அதே சின்னத்திரை படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்குவது பற்றி பேச மாண்புமிகு முதல்வரை சந்திக்க சென்ற போது மாஸ்க்கும் பேஸ்கட்டுமாக போட்டோவிற்கு போஸ் கொடுத்திருப்பதுமான புகைபடமும் அந்த வீடியோ மற்றும் அவரது ஏகவசன ஆடியோ (வாய்ஸ்) மெஸேஜ் உள்ளிட்டவைகளுடன் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி அனைத்து ஊடகத்துறையினரின் ஒட்டுமொத்த கோபத்திற்கும் ஆளாகியுள்ளார் திருமதி.குஷ்பு.

இந்த நிலையில் தன் பேச்சும் செயல்பாடுகளும் அனைத்து பத்திரிகையாளர்கள் மத்தியிலும் கண்டனத்திற்கு உள்ளாகி வருவதை அறிந்த குஷ்பு, தனது டிவிட்டர் பக்கத்தில் போனால் போகிறதென்று வருத்தம் தெரிவித்து இவ்விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றிருக்கிறார்.

‘அது மட்டும் நிச்சயம் போதாது….’ என அனைத்து பத்திரிகையாளர்களும், நமது 65 ஆண்டு பாரம்பரியம் மிக்க சினிமா பத்திரிகையாளர் சங்கமும் கருதுவதாலும், வரும் காலங்களில் இவரைப்போல., திரை உலகை சார்ந்த எவரும் பத்திரிகையாளர்களை அவமதிக்காமல் இருக்க வேண்டுமென்பதற்காகவும் திருமதி.குஷ்பு, அனைத்து பத்திரிகையாளர்களிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதே நமது சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் நிலைப்பாடு.

அதுவரை, திருமதி.குஷ்பு, அவரது கணவர் திரு.சுந்தர்.சி மற்றும் அவர்கள் சார்ந்த சின்னத்திரை & சினிமா பத்திரிகையாளர் சந்திப்புகள் அனைத்தையும் நம் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தவிர்ப்போம் என கேட்டு கொள்கிறோம்!

அஜித்துக்கு பிரியாணி சமைக்க தான் தெரியும், நடிக்க வராது – மோசமாக விமர்சித்த சீரியல் நடிகர்.!

குறிப்பு : கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையில் பல துறைகள் போல சினிமா துறை எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறதோ, அதுபோல் பத்திரிகை துறையும், நிருபர்களும் பாதிக்கப்பட்டிருந்தாலும்., அதை பொருட்படுத்தாமல், தங்களது உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல், கொரோனா களத்தில் அயராது பணிபுரிந்துக் கொண்டிருக்கும் நிலையில், திருமதி.குஷ்பு அவர்களின் இந்த பேச்சால் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்களும் வருத்தமும், வேதனையும் அடைந்துள்ளனர்.

சினிமா துறை மற்றும் தொலைக்காட்சி துறையை சார்ந்த தொழிலார்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதனால், படப்பிடிப்பை தொடங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும், என்ற சினிமாத்துறையின் கோரிக்கைகளையும், தொழிலாளர்களின் குரல்களையும் அரசுக்கு எடுத்துச் செல்வதில் பத்திரிகையாளர்கள் பெரும் பங்கு வகித்த நிலையில், திருமதி.குஷ்பு அவர்களின், இந்த ஆணவப் பேச்சு அவர் செயலாளராக அங்கம் வகிக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கரும்புள்ளியாகும் என்பதையும் அச்சங்கத்தினர் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதையும் சுட்டிகாட்ட விழைகிறோம் என கூறியுள்ளனர்.

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய குஷ்பு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் -‌ பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம்!

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய குஷ்பு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் -‌ பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம்!