COVOD19 Update 28.08.20
COVOD19 Update 28.08.20

தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVOD19 Update 28.08.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் இன்று கொரானாவால் 5,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,09,238 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,49,682 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 5,752 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

இன்று 102 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,050 ஆக உயர்வு.

இதுவரை தமிழகம் முழுவதும் 41 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பியானா வசந்த் குமார் அவர்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். எம்பி வசந்தகுமார் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.