COVOD19 Update 05.07.20
COVOD19 Update 05.07.20

நேற்றைப் போலவே இன்றும் தமிழகத்தில் உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.

COVID 19 Update 05.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 4,280 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

கடைசி 16 நாட்களில் மட்டும் 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இன்று 2,186 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 60,564 ஆக உயர்ந்துள்ளது. இன்று 60 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவரின் மொத்த எண்ணிக்கை 1510 ஆக உயர்ந்துள்ளது.

கோலாகலமாக நடந்து முடிந்த வனிதாவின் திருமணம் – இணையத்தில் மணக்கோல வைரலாகும் புகைப்படங்கள்

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.7 லட்சத்தை தாண்டியது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் பெரும்பாலான இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

நாளை முதல் சென்னை உட்பட பல இடங்களில் பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார்.