YouTube video

Covishield Vaccine Tested Soon In Tamil Nadu – Massive Update

தமிழகத்தில் கோவிஷூல்டு மருந்து பரிசோதனை குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.கடந்த வருடம் டிசம்பரில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் பரவி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

காற்றின் மூலமாக அதி தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் இந்தியாவில் 49 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் பாதிப்பு 4.5 லட்சத்தை தாண்டியுள்ளது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்ததற்போதைக்கு தனிமைப் படுத்திக் கொள்ளுதல் ஒன்றே தீர்வாக உள்ளது. இந்த வழிகாட்டுதலை முழுமையாக ஒழிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவிலும் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பு மருந்தையும் ஆக்ஸ்போர்ட் சீரம் இன்ஸ்டிடியூட் கோவிஷீல்ட் என்ற தடுப்பு மருந்தை கண்டு பிடித்து சோதனை செய்து வருகிறது.

தற்போது இந்ததடுப்பு மருந்தின் மனித பரிசோதனை தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ன்னையில் மொத்தம் 180 பேருக்கு இந்த தடுப்பூசி மருந்து அளித்து பரிசோதிக்கப்பட உள்ளது.

மனித பரிசோதனை வெற்றிகரமாக முடிந்ததும் இந்த தடுப்பூசி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.