COVID19 Update 30.06.20
COVID19 Update 30.06.20

முதல் முறையாக இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.

COVID19 Update 30.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 3,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 2,393 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 60 பேர் பலியானதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 2,325 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 50,074 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மதுரை, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரானாவின் பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருவது அம்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ச்சே.. காவல்துறையை வைத்து 5 படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன் – இயக்குனர் ஹரி ஆவேசம்

மேலும் தமிழகத்தில் சில தளங்களுடன் ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை தற்போது வழக்கத்தில் இருந்து வந்த தனியார் அரசுப் பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்குள் ஆக பயணிக்க இ பாஸ் தேவையில்லை எனவே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று ஓ பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ ராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருடைய உடல்நிலை சீராக இருந்து வருவதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும் இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு தினங்களில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி விடும்.