COVID19 Update 29.06.20
COVID19 Update 29.06.20

முதல் முறையாக இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.

COVID19 Update 29.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 3,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 179 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1992 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

6 வருடத்திற்குப் பிறகு நேருக்கு நேர் மோத போகும் தல தளபதி? – வெளியானது வலிமை, தளபதி 65 ரிலீஸ் தேதி!

தமிழகத்தில் இன்று 62 பேர் பலியானதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 2,212 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 47,749 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மதுரை, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரானாவின் பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருவது அம்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பரிசோதனைகள் அதிகப்படுத்த வேண்டும். அடர்த்தி அதிகமாக உள்ள இடங்களில் கொரானா இன்னும் வேகமாக பரவும் என முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கை நீட்டிக்கலாம் எனவும் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை எனவும் மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

மேலும் இன்று ஓ பன்னீர் செல்வத்தின் தம்பி ஒரு ராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.