COVID19 Update 28.06.20
COVID19 Update 28.06.20

முதல் முறையாக இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.

COVID19 Update 28.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 3,940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 179 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1992 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 54 பேர் பலியானதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,079 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா அதிகம் பரவ ஸ்டாலின் தான் காரணம்? – முதல்வர் பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு, காரணம் என்ன?

இன்று 1,443 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 45,537 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டி கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மதுரை, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் கொரானாவின் பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருவது அம்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.