COVID19 Update 24.06.20
COVID19 Update 24.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID19 Update 24.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் டெல்லியில் ஒரே நாளில் 3,788 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் தமிழகத்தில் 2,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1,654 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாராவுக்கு கொரோனா தொற்றா? பரபரப்பை ஏற்படுத்திய தகவல் – விக்னேஷ் சிவன் கொடுத்த விளக்கம்

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 67,468ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 33 பேர் பலியானதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 866 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 2,464 பேர் டிஸ்சார்ஜ் போனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 37,763 ஆக உயர்ந்துள்ளது. இது நிம்மதியளிக்கும் ஒன்றாக உள்ளது.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4,56,183 ஆகவும் குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 2,58,685 ஆகவும உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,476 ஆக அதிகரித்துள்ளது.