Covid19 Possitive for Junior NTR

பிரபல தெலுங்கு நடிகர் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக பதிவிட்டு இருப்பது மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Covid19 Possitive for Junior NTR : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வருடம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி பின்னர் ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில் தற்போது மீண்டும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

நாளுக்கு நாள் இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து கொண்டே வருகிறது. சாதாரண மக்களைப் போலவே தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ் திரையுலகில் கொரோனா வைரஸால் பல திரையுலக பிரபலங்கள் மரணம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்டிஆர் தான் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜூனியர் என்டிஆர் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் பூரண குணம் பெற வேண்டும் எனவும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.