COVID 19 Update 28.05.20
COVID 19 Update 28.05.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 28.05.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 117 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

வறுமையில் வாடும் மக்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் உதவிய விஜய் மகளிர் மக்கள் இயக்கம் – புகைப்படங்களுடன் இதோ.!

மேலும் தமிழகத்தில் இன்று 12 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 10,548 ஆக உயர்ந்திருப்பது நிம்மதி தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

அதேபோல் இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 158721 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 68282 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4545 ஆகவும் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.