COVID 19 Update 27.05.20
COVID 19 Update 27.05.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 27.05.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 139 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

மேலும் தமிழகத்தில் இன்று 6 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது.

இன்றும் கிடுகிடுவென உயர்ந்த கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பு.!

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18,545 ஆக உயர்ந்துள்ளது.

குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 9909 ஆக உயர்ந்திருப்பது கொஞ்சம் நிம்மதி தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

அதேபோல் இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 152496 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 64721 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4350 ஆகவும் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.