COVID 19 Update 26.06.20
COVID 19 Update 26.06.20

முதல் முறையாக இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.

COVID 19 Update 26.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 3,645 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 122 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். சென்னையில் மட்டும் 1956 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாஸ்டர் படத்தை கைப்பற்றிய அமேசான் நிறுவனம்.. அதுவும் எத்தனை கோடிக்கு தெரியுமா?

தமிழகத்தில் இன்று 46 பேர் பலியானதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,358 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 41,357 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கி வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு முதல்வர் திங்கட்கிழமை மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே இது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களிடையே கோரிக்கைகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.