COVID 19 Update 24.07.20
COVID 19 Update 24.07.20

தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 24.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் இன்று 6,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,43,297 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 6504 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

தனுஷ் நடித்த மொத்த படங்களில் எத்தனை எத்தனை ஹிட்? எத்தனை பிளாப் தெரியுமா? – முழு விவரம் இதோ!

இன்று 88 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3320 ஆக உயர்வு.

தமிழகத்தின் முதல் ஆளாக பரமக்குடி தொகுதியைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன் பிளாஸ்மா தானம் செய்துள்ளார். மேலும் இன்னொரு முறை பிளாஸ்மா தானம் செய்வேன் எனவும் கூறியுள்ளார்.

அவரை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டு பாராட்டியுள்ளார்.