COVID 19 Update 22.06.20
COVID 19 Update 22.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 22.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 2,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 1487 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 37 பேர் பலியானதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்துள்ளது.

39 வயதில் கவர்ச்சி தேவையா? விமர்சித்தவர்களுக்கு பிரபல தமிழ் நடிகை கொடுத்த பதிலடி

இன்று 1,358 பேர் டிஸ்சார்ஜ் போனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது. இது நிம்மதியளிக்கும் ஒன்றாக உள்ளது.

மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிவிரைவாக அதிகம் பேர் குணமாகி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மட்டும் 87 குறைவான பரிசோதனை மையங்கள் அமைத்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.