COVID 19 Update 19.07.20
COVID 19 Update 19.07.20

தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 19.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் இன்று 4,979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,70,693 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை‌ 26 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,17,915 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 4059 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,121 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 78 பேர் பலியாகி உள்ளனர்.

திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜு கொடுத்த அதிர்ச்சிகர பதில்!

கொரானா நோயாளிகளை குணப்படுத்த பல்வேறு இடங்களில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை நடைபெற தொடங்கியுள்ளது.

மேலும் இன்று இராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ காந்தி மற்றும் வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன் ஆகியோருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர்கள் இருவரும் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கிருஷ்ணகிரியை சேர்ந்த திமுக எம்எல்ஏ செங்குட்டுவனுக்கும் கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மனிதர்களின் சோதனை முயற்சியாக இந்தியா கண்டுபிடித்துள்ள கோவேக்சின் என்ற தடுப்பூசி நாளை முதல் செலுத்தப்படவுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.