COVID 19 Update 18.07.20
COVID 19 Update 18.07.20

தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 18.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 4,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை‌ 26 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவு – முதல்வர் கூறிய காரணம்!

இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,13,856 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 3049 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,403 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 88 பேர் பலியாகி உள்ளனர்.

கொரானா நோயாளிகளை குணப்படுத்த பிளாஸ்மா தெரபி சிகிச்சை மும்முரமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் சி விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இன்று திட்டக்குடி தொகுதியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏவுக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.