COVID 19 Update 16.07.20
COVID 19 Update 16.07.20

தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 16.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 4,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 5,106 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,07,416 உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 69 பேர் பலியானதால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9.6 லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை‌ 25 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

விஜய்யுடனான முதல் சந்திப்பு.! – மனம் திறந்த மாளவிகா மோகனன்

இன்று மட்டும் ஐந்தாயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 69 பேர் பலியாகியுள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் ஜூலை 31ம் தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரானா பாதிப்பு கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் மதுரை வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.