COVID 19 Update 15.07.20
COVID 19 Update 15.07.20

தமிழகத்தில் இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்ன? என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 15.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 4,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டி உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை‌ 23 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

இன்று மட்டும் ஐந்தாயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 69 பேர் பலியாகியுள்ளனர்.

நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் ஜூலை 31ம் தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாவ் பிக்பாஸ் ஜூலியா இது?? இவ்வளோ அழகாகிட்டாங்களா?? லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்

சென்னையில் கொரானா பாதிப்பு கடந்த சில தினங்களாக தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் மதுரை வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

மேலும் இன்று கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார் மட மார்க்கெட்டில் ஆறு வியாபாரிகளுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டதால் மார்க்கெட் மூடப்பட்டுள்ளது.

அதேபோல் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிலும் 2 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மார்க்கெட்டும் மூடப்பட்டுள்ளது.