COVID 19 Update 13.06.20
COVID 19 Update 13.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 13.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 1,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் இன்று 30 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 397 ஆக உயர்ந்துள்ளது.

தளபதி விஜயின் பிறந்தநாள்.. விஜய் மக்கள் இயக்கம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – இதை சொன்னது தளபதி தானாம்!

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42,687 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 1,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரானாவின் கோரப்பிடியிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 23,409 ஆக உயர்வு.

அதேபோல் இந்திய அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,08,993 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 1,54,330 உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,884 ஆகவும் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.