COVID 19 Update 07.07.20
COVID 19 Update 07.07.20

தமிழகத்தில் மூன்றாவது நாளாக குருணை பாதிப்பு குறைந்துள்ளது. அது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

COVID 19 Update 07.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தில் 3,616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1203 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 65 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1636 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 4545 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 71,116 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7.2 லட்சத்தை தாண்டியது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை‌ 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் பல்வேறு தளர்வுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் 750 படுக்கைகளுடன் புதிய மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால்?? – முதல்வரிடம் மருத்துவக்குழு கூறிய ஆலோசனை!

தமிழகத்தில் கொரானா சமூக பரவலாக மாறவில்லை. நாள் நோய் பரவல் குறைவது மக்கள் கையில்தான் உள்ளது என கூறியுள்ளார். மேலும் ஊரடங்கு உத்தரவால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் வாழ்வாதாரத்தை கருதி தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்க போவதில்லை. வீட்டை விட்டு வெளியே செல்லும்போது மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அதைப்போல் பள்ளி கல்லூரிகளை திறக்க மாதம் 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மற்ற ஊழியர்கள் என அனைவரும் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.