COVID 19 Update 06.07.20
COVID 19 Update 06.07.20

தமிழகத்தில் நேற்றைவிட இன்று கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

COVID 19 Update 06.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 3,827 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை‌ 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

சூரரைப் போற்று பாடல் படைத்த புதிய சாதனை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிறுவனம்

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் பெரும்பாலான இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் இன்று பல இடங்களில் கூட்டம் அலைமோதி உள்ளது.

சென்னையில் பல்வேறு தளர்வுகள் இன்று நடைமுறைக்கு வந்துள்ளன. முன்னாள் அதிமுக அமைச்சர் பா வளர்மதிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.