COVID 19 Update 05.06.20
COVID 19 Update 05.06.20

இந்தியாவில் இன்றைய கொரானா வைரஸ் பாதிப்பு என்ன? குணமடைந்தோரின் எண்ணிக்கை என்ன என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

COVID 19 Update 05.06.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் இன்று கொரோனா வைரஸால் தமிழகத்தில் 1,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 33 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

இதை செய்தால் மட்டுமே மனித குலம் காக்கப்படும்.. கேரளாவில் யானையைக் கொன்றது குறித்து விஜயகாந்த் அதிரடி கருத்து!

மேலும் தமிழகத்தில் இன்று 12 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் இந்திய அளவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,26,770 ஆகவும் குணமடைந்தவரின் எண்ணிக்கை 1,09,462 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,348 ஆகவும் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.