COVID 19 Update 03.07.20
COVID 19 Update 03.07.20

நேற்றைப் போலவே இன்றும் தமிழகத்தில் உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.

COVID 19 Update 03.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 4,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டோரில் 65 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி 16 நாட்களில் மட்டும் 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 2,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று 2,357 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,378 ஆக உயர்ந்துள்ளது. இன்று 64 பேர் உயிர் இழந்ததால் உயிரிழந்தவரின் மொத்த எண்ணிக்கை 1385 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தற்போது நாளொன்றுக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் பாதிக்கப்படுவரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் மருத்துவமனையில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்புவர்களில் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருவது மட்டுமே திருப்தி அளிக்கும் ஒன்றாக இருந்து வருகிறது.