COVID 19 Update 02.07.20
COVID 19 Update 02.07.20

நேற்றைப் போலவே இன்றும் தமிழகத்தில் உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.

COVID 19 Update 02.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 4,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 3,095 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 56,021 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

தனுஷுடன் அடுத்த படம் உறுதி.. இயக்குனரின் பேக் ஐடியில் வெளியான அறிவிப்பு, அதற்கும் லைக் போட்ட முன்னணி நடிகர் – என்ன கொடுமை சார் இது!

மேலும் அரசியல் வட்டாரத்தில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ ராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து இன்று பரமக்குடியை சேர்ந்த அதிமுக எம்எல்ஏ சாத்தன் பிரபாகரன் என்பவருக்கும் அவரது மனைவி, மகன் மற்றும் உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது.

அதுமட்டுமல்லாமல் உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு என்பவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

பாதிக்கப்பட்ட 2 அதிமுக எம்எல்ஏக்களையும் தொலைபேசி வாயிலாக முதல்வர் பழனிசாமி நலம் விசாரித்துள்ளார்.