COVID 19 Update 01.07.20
COVID 19 Update 01.07.20

நேற்றைப் போலவே இன்றும் தமிழகத்தில் உச்சகட்ட பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.

COVID 19 Update 01.07.20 : கடந்த வருடம் சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் பலவற்றை மிரட்டி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் 3,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 94,049 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 75 பேர் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,182 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 63 பேர் பலியானதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,264 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 2,852 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 52,926 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் 28 நாள் இருக்கு.. தனுஷ் படத்தின் அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் – தெறிக்கவிடும் தனுஷ் ரசிகர்கள்!

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் தற்போது மதுரை, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர், கடலூர் என தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பாதிப்பு விறுவிறுவென அதிகரித்து வருகின்றது.

மேலும் அரசியல் வட்டாரத்தில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ ராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.