COVID 19 Recovery Rate in Tamilnadu
COVID 19 Recovery Rate in Tamilnadu

13 மாவட்டங்களில் இதுவரை 80 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

COVID 19 Recovery Rate in Tamilnadu : இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் இந்த வைரஸால் 3.38 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 13 மாவட்டங்களில் இருந்து மட்டுமே 80% பேர் குணமடைந்து உள்ளனர்.

அதிலும் குறிப்பாக மதுரையில் மட்டும் 89.3% மற்றும் சென்னையில் 88 % பேர் குணமடைந்துள்ளனர்.

கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் 55% பேர் குணமடைந்து உள்ளனர். மேலும் 44% பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வீழ்ச்சியை கண்டு வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்திலும் இதே நிலைதான் தொடர்கிறது.

ஜூலை மாத TRP-யில் மாஸ் காட்டிய 10 படங்கள் – முதலிடத்தில் யார் தெரியுமா?

வெளி மாவட்டங்களில் இருந்து பலரும் சென்னைக்கு திரும்பி வருவதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடலூர், தேனி, நாகப்பட்டினம் மற்றும் கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில், 72 மணி நேரத்திற்குள் தொடர்புத் தடத்தை முடிக்கவும், வழக்குகளை துல்லியமாக பகுப்பாய்வு செய்யவும் நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.