Covaikai Poriyal :
Covaikai Poriyal :

Covaikai Poriyal :

துணை உணவு செய்வது என்றால் தலையே சுற்றி விடுகின்றது என்று புலம்புபவர்களுக்கு இந்த பொரியல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

1. கோவைக்காய் – 1/2 கிலோ

2. கடலை பருப்பு – 2 ஸ்பூன்

3. காய்ந்த மிளகாய் – 4

4. கடுகு – 1ஸ்பூன்

5. வெங்காயம் – 1

6. கறிவேப்பிலை – சிறிதளவு

7. மல்லி தூள் – 1 ஸ்பூன்

8. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

9. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

10. தேங்காய் துருவல் – சிறிதளவு

11. எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை :

முதலில் கவைக்காயை நீள வாக்கில் அறிந்து நல்ல நீரில் கழுவி சிறிது உப்பு போட்டு கிளறி எடுத்து வைத்துகொள்ள வேண்டும். பிறகு, கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின், அதே பாத்திரதில் மீண்டும் எண்ணெய் ஊற்றி அதில் கடுப்பு கடலை பருப்பு போட்டு தாளித்து பின் அதில் வெங்காயம் சேர்த்து பின் கோவைக்காய்,கறிவேப்பிலை சிறிது உப்பு போட்டு 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

பிறகு, அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் போட்டு தேவைபாட்டால் சிறிது எண்ணெய் ஊற்றிக்கொள்ளலாம்.

சிறிது நேரம் மூடி வைத்து வெந்த பிறகு பொடித்து வைத்துள்ள கடலை பொடி மற்றும் சிறிது தேங்காய் துருவல் போட்டு ஒரு கிளறு கிளறி இறக்கினால் கோவைக்காய் பொரியல் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here