Covaccine Injection From India
Covaccine Injection From India

கொரானாவை தடுப்பதற்கான தடுப்பூசி மருந்தை இந்தியா Covaccine என்ற பெயரில் ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளது.

Covaccine Injection From India : சீனாவில் கடந்த வருடம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை கிட்டத்தட்ட ஆறு லட்சம் பேர் இந்த வைரஸிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 86 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

உலக நாடுகள் அனைத்தும் தற்போது இந்த வைரஸிற்கான தடுப்பு மருந்தை கண்டு பிடித்ததும் வேலைகளில் கவனத்தை செலுத்தி வருகிறது.

சில நாடுகளில் சில மருந்துகளை கண்டுபிடித்து அதன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடேங்கப்பா.. நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு அழகான மகளா?? – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கோவேக்ஸின் என்ற பெயரில் புதிய தடுப்பு மருந்து ஒன்றை கண்டுபிடித்து உள்ளது.

விலங்குகளிடம் இந்த மருந்தை வைத்து சோதனை நடத்திய போது இது நல்ல பலன் அளிப்பதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஐ சி எம் ஆர் இந்த மருந்தை மனிதர்களிடம் பரிசோதனை செய்ய அனுமதி அளித்துள்ளது. ஜூலை முதல் மனிதர்களுக்கிடையே பரிசோதனை நடைபெறும் என தெரிகிறது.

மனிதர்களுக்கும் இந்த மருந்து நல்ல பலனைக் கொடுத்தால் விரைவில் கொரோனாவை விரட்ட முடியும் என இந்தியா நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளது.

இந்த மருந்து நல்ல பலனை அளிக்க வேண்டும் என்று மக்கள் இறைவனை வேண்டி வருகின்றனர்.