Court Warning to District Collector
Court Warning to District Collector

Court Warning to District Collector : மணல் கொள்ளையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் மணலூர் சேர்ந்த பொற்கோ என்பவர் தாக்கல் செய்த மனுவில் வைகை ஆற்றை ஒட்டிய பகுதியில் கீழடி அகரம் குத்தகை மணலூர் பசியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது இதில் கீழடி உள்ளிட்ட பல இடங்களில் தமிழர்கள் நாகரீகமாக வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.

நாடுகள் சுயநலம் காட்டினால் கொரோனாவை வீழ்த்த முடியாது: WHO எச்சரிக்கை!!(Opens in a new browser tab)

எனவே இந்த பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம். சந்திர நாராயணன் மற்றும் ராஜாமணி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்ததையொட்டி, அப்பகுதியில் சவுடு மண் எடுத்ததற்கான விதிகள் முறையாக பின்பற்றப்படுக்கிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்களா? என பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அதன்பின், தினந்தோறும் நீதிமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட மணல் கொள்ளை தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன.

இதன் மூலம் மணல் கொள்ளையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதே நிலை தொடர்ந்தால் மாவட்ட ஆட்சியர்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.