Sterlite Plant
Sterlite Plant

Court Verdict on Sterlite Company : தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்தத் தீர்ப்பிற்கு அரசியல்வாதிகள் முதல் பாமர மக்கள் வரை ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. இதனை ஒடுக்க நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

தனியார் மயமாக்கப்பட்ட ரயில்வே திட்டத்தின் முதல் கட்ட நடவடிக்கை என்ன தெரியுமா?

இந்த சூழலில் இதையடுத்து இந்நிலையில் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு தூத்துக்குடி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் தூத்துக்குடி ஒரு விழாக்கோலம் போல் தோற்றமளிக்கிறது.

தூத்துக்குடியில் ஏதாவது அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.