Court Verdict on Karnan Movie

கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றால் அப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Court Verdict on Karnan Movie : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாகும் திரைப்படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய பெயரில் பாடல் ஒன்று வெளியாகி இருந்தது.

இந்த பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் இந்த பாடலை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் தற்போது இந்த பாடலை நீக்காமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது இடைக்கால தடை விதிக்க வேண்டும் என புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்குமாறு பாடலை பாடிய தனுஷ், தேவா, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு படக்குழு எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.