Cough Treatment
Cough Treatment

Cough Treatment : *

நொச்சி முழுத்தாவரமும் உடல் அசதியைத் தணிக்கும், சிறுநீரைப் பெருக்கும், காய்ச்சலைப் போக்கும், ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும். மாதவிலக்கை தூண்டும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்.

* நொச்சி இலைகளை எடுத்து அதனுடன் சுக்கு சேர்த்து அரைத்து நெற்றிப் பொட்டில் பூசி வந்தால் தலைவலி குறையும்.

* சுடு நீரில் நொச்சி இலைகளைப் போட்டு ஆவி பிடித்து வந்தால் சளி மற்றும் மூக்கடைப்பு குறையும்.

* ஒரு நொச்சி இலையை எடுத்து அதனுடன் ஒரு பூண்டு பல் மற்றும் இரண்டு மிளகு சேர்த்து அடிக்கடி மென்று சாப்பிட்டு வந்தால் இளைப்பு குறையும்.

* நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து, அதை வலி உள்ள இடத்தில் தேய்த்து வெந்நீரில் வாரம் இருமுறை குளித்து வந்தால் கழுத்து வலி குறையும்.

* ஆஸ்துமா தீர நொச்சி இலை,மிளகு,லவங்கம்,பூண்டு மென்று முழுங்கலாம்.

* நொச்சி இலைச்சாறு,மிளகு தூள்,நெய் சேர்த்து சாப்பிட்டு வர மூட்டு வலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும்.

* நொச்சி இலைகளை பனை வெல்லம் சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் உடல் வெப்பம் குறையும்.

* நொச்சி இலையும், வாதமடக்கி இலையும் எடுத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ் சூடாக கட்டி வந்தால் குதிவாதம் குறையும்.

* சிறிதளவு நொச்சி இலை, சிறிதளவு மருதாணி இலை, எருக்கன்பூ சேர்த்து அரைத்து நகத்தில் கட்டினால் நகச்சுற்று குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here