Cough Treatment :
Cough Treatment :

Cough Treatment : ▪ ஜலதோஷம் நீங்க துளசி ரசம்,இஞ்சி ரசம் கலந்து பருகலாம்.

▪ துளசி சாறு,இஞ்சி சம அளவு கலந்து குடிக்கலாம்.

▪ ஜலதோஷம் தீர மாதுளம் பழம் சாப்பிடலாம்.

▪ சின்ன வெங்காயச்சாறு , இஞ்சிச்சாறு, தேன் இம்மூன்றையும் கலந்து சாப்பிட ஜலதோஷம், இருமல் குறையும்.

▪ சீரகத்தை பொன் வருவலாக வறுத்து பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து
சாப்பிடலாம்.

▪ கொள்ளை அவித்து, நீரை வடித்து ரசம் செய்து சோற்றுடன் கலந்து சாப்பிடலாம்.

▪ சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பியை காலையில் குடித்து வந்தால் ஜலதோஷம் குறையும்.

▪ துளசி இலை மற்றும் கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அவித்து அதன் சாற்றைப் பிழிந்து ஒரு வேளைக்கு 10 மி. லி வீதம் 3 நாட்கள் குடித்து வந்தால் ஜலதோஷம், கோழை மற்றும் இருமல் குறையும்.

▪ தூதுவளை செடியில் ரசம் வைத்து சாப்பிடலாம்.

▪ நல்ல மிளகு இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி ஒரு அவுன்சு குடித்து வந்தால் தலைக்கனம் மற்றும் ஜலதோஷம் குறையும்.

▪ அரைக்கீரையுடன் மிளகுபொடி சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்

▪ வெற்றிலைச்சாறு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம்.

▪ மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி சிறிதளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட ஜலதோஷம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here