Shruthi Haasan
கொரோனா வைரஸை தடுக்க போதி தர்மரால் மட்டுமே முடியும், அவரை மீண்டும் கொண்டு வர ஸ்ருதி ஹாசன் வேண்டும் என அதகளம் செய்து வருகின்றனர்.

Corono Virus Meme : கோரோனோ வைரஸ் இந்தியா முழுவதும் காட்டு தீ போல பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் இதனை வைத்தும் மீம்ஸ் உருவாக்கி அதகளம் செய்ய தொடங்கி விட்டனர்.

இந்த மீம்களில் அதிகளவில் ஸ்ருதி ஹாசன் தான் இடம் பெறுகிறார். இது போன்று ஒரு சம்பவத்தை மையமாக கொண்டு உருவான படம் ஏழாம் அறிவு.

சூர்யா நடித்திருந்த இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்திருந்தார். போதி தர்மர் பரம்பரையை சேர்ந்த சூர்யாவின் ஜீனில் இருந்து ஸ்ருதி ஹாசன் தான் போதி தர்மரை வெளியே கொண்டு வருகிறார்.

இதனால் தற்போதும் இந்த கோரோனோ வைரஸ் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண போதி தர்மர் வேண்டும், அவரை வெளியே கொண்டு வர ஸ்ருதி ஹாசன் வேண்டும் என்பது போல மீம்களை உருவாக்கியுள்ளனர்.

இதோ அந்த மீம்

Corono Mems

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.