YouTube video

Corona Virus – Tamil Nadu Mass Treatment Then World Level

கொரானா சிகிச்சையில் உலகத்துக்கே முன்மாதிரியாக திகழும் தமிழகம் – அப்படி என்ன செய்துள்ளார்கள் தெரியுமா??

கொரானா சிகிச்சையில் உலகத்திற்கே முன்மாதிரியாக தமிழகம் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்திலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இடம் பிடித்துள்ளது. தமிழகத்திலும் இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் தமிழக அரசு சரியான திட்டங்களின் மூலமாகவும் தரமான சிகிச்சை மூலமாகவும் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.

இதன் விளைவாக தமிழகம் பல்வேறு நடவடிக்கைகளில் இந்திய அளவில் முதலிடத்தை பெற்று சிறந்து விளங்கி வருகிறது.

அது குறித்த சில தகவல்கள்

தமிழகத்தில் கொரானாவிலிருந்து இதுவரை 81.4 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று வரை 34,32,025 பேருக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அதிக பேருக்கு பரிசோதனை செய்த மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

மாநிலத்துக்கு குறைந்தது ஒரு பரிசோதனை மையம் என தமிழகம் முழுவதும் 135 கொரானா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதிலும் இந்திய அளவில் தமிழகம் தான் முதலிடம். இவற்றில் அரசு பரிசோதனை மையம் 61, தனியார் பரிசோதனை மையம் 74.

இந்தியாவிலேயே ஒவ்வொரு நாளும் அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்ளும் மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. நேற்று ( ஆகஸ்ட் 12 ) மட்டும் 71,515 பேருக்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இ-சஞ்சீவனி என்ற திட்டத்தின் மூலமாக இதுவரை 44 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இணையதளம் மூலமாக மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்தத் திட்டத்தில் தமிழக அரசு இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிகமான அளவில் அரசு மருத்துவர்கள் கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அளவில் கொரானா சிகிச்சைக்கான மருத்துவ உட்கட்டமைப்புகளை அதிக அளவில் கொண்ட மாநிலமாகவும் தமிழக அரசு திகழ்ந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 1,29,122 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் 56, 482 படுக்கைகள் மற்றும் கொரானா சிகிச்சை மையங்களில் 72,640 படுக்கைகள் உள்ளன. 2882 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

பிளாஸ்மா தெரபி சிகிச்சையிலும் இந்திய அளவில் தமிழ்நாடு அரசு சிறந்து விளங்கி வருகிறது.

மேலும் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழகத்தில் பின்பற்றிய நடவடிக்கைகள்

  1. ஆரம்பத்திலேயே பரிசோதனை
  2. நோயாளியின் தடம் அறிந்து அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் சோதனை.
  3. பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுபாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு.
  4. 300 தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு ஒரு அதிகாரி
  5. சென்னை போன்ற பெருநகரங்களில் வீடு வீடாகச் சென்று பரிசோதனை.
  6. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்.
  7. அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே வீட்டிற்கு அனுப்பப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
  8. அறிகுறி இருப்பவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு அவர்களுக்கு கொரானா உறுதி செய்யப்பட்டால் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
  9. தமிழகம் முழுவதும் தரமான சிகிச்சை மற்றும் உணவு.
  10. தேவைக்கு அதிகமான மருத்துவர்கள் மற்றும் படுக்கை வசதிகள்.
  11. மாவட்டம் தோறும் சிகிச்சை மையங்கள்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.