YouTube video

Corona Virus Status in Chennai : தமிழகத்தின் கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் பாதிப்பின் உச்சத்தில் இருந்த சென்னை தற்போது அதிலிருந்து மீண்டு வர தொடங்கியுள்ளது.

சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 86% பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சென்னையில் வெறும் 12 சதவீத நோயாளிகள் மட்டுமே கொரானா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதாவது 12,190 பேர் தான் கொரானா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுவரை 87,604 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,157 பேர் சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரானா எதிரொலி.. கமல் தனிமைப்படுத்தப்பட்டாரா? – வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீசால் பரபரப்பு.!

தற்போதைக்கு தென் சென்னையில் மட்டுமே அதிகம் பாதிப்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அம்பத்தூர் தொகுதியில் தான் பாதிப்பு அதிகம்.

இந்தத் தொகுதியில் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் பாதிப்பு விகிதம் 5 சதவீதம் குறையும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த தொகுதிகளில் காய்ச்சல் முகாம்கள், வீடு வீடாகச் சென்று பரிசோதனை என முழு வீச்சில் மாநகராட்சி அலுவலர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் துரித நடவடிக்கையாலும் அரசு மருத்துவமனைகளின் சிறந்த சிகிச்சையையாலும் குணமடைந்தவரின் விகிதம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மக்கள் பலரும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.