YouTube video

Corona Virus Positive Cases Details in Chennai : இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி இருந்தது.

ஆரம்பத்தில் சென்னையில் கோரத்தாண்டவம் ஆடிய கொரானா தமிழக அரசின் அதிதீவிர நடவடிக்கைகளாலும் சிறந்த மருத்துவத்தாலும் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது.

100 சோதனைகளுக்கு பாசிட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கைக்கான விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

சென்னையின் கோவிட் -19 டெஸ்ட் பாசிட்டிவிட்டி வீதம் (டிபிஆர்) ஆகஸ்ட் 8 (சனிக்கிழமை) அன்று வெறும் 7% மட்டுமே என்று கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமை 14,027 சோதனைகள் செய்யப்பட்டன. 986 பேர் மட்டுமே பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 7 அன்று சோதனை நேர்மறை விகிதம் 8% ஆக இருந்தது. ஆகஸ்ட் 6 அன்று இது 9.4% ஆக இருந்தது. தற்போது 7% ஆக குறைந்துள்ளது.

ஆகஸ்ட் இறுதிக்குள் சென்னை 6.5% TRP-ஐ இலக்காகக் கொண்டுள்ளது என்று கிரேட்ட்டர் சென்னை கார்பரேஷன் ஆணையர் ஜி பிரகாஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.